2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

புலிகளின் முன்னாள் புலனாய்வுப் பொறுப்பாளர் கைது; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Suganthini Ratnam   / 2016 மே 03 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரான பிரபா என்று அழைக்கப்படும் கலைநேசன் (வயது 46) என்பவர் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அவரது மனைவி கயல்விழி திங்கட்கிழமை (02) முறைப்பாடு செய்துள்ளார்.

மேற்படி நபர் மட்டக்களப்பில் வைத்து பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் (ரி.ஐ.டி) திங்கட்கிழமை (02) காலை கைதுசெய்யப்பட்டார்.

மட்டக்களப்பு, மஞ்சந்தொடுவாயிலுள்ள தங்களின் வீட்டுக்கு திங்கட்கிழமை காலை 6.30 மணிக்கு வந்த பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர், தனது கணவரை கைதுசெய்து அழைத்துச் சென்றதாக அவரது மனைவி தெரிவித்திருந்தார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு அவர் தெரிவிக்கையில், 'எனது கணவரை இறுதி யுத்தத்தில் தவறவிட்டிருந்தேன். அப்போது நான் எனது 30 நாள் மகளுடன் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துவிட்டேன்.

எனது கணவர் இறந்துவிட்டார் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், 2013ஆம் ஆண்டு எனது கணவர் தடுப்பு முகாமில் உள்ளதாகவும் என்னை வந்து சந்திக்குமாறும் தொலைபேசி அழைப்பு வந்தது.

அதன் பின்னர் என்னிடம் இவர் புனர்வாழ்வு பெற்றதற்கான கடிதத்தை தந்ததுடன், நான் இவரை பொறுப்பேற்றுக் கொண்டதாக என்னிடம் கையொப்பம் வாங்கிவிட்டு என்னிடம் எனது கணவரை அன்றும் ஒப்படைக்கவில்லை.
அவர்கள் மட்டக்களப்பிலுள்ள புலனாய்வு அலுவலகம் ஒன்றுக்கு கொண்டு சென்று ஒரு மாதம் வைத்திருந்த பின்னரே எனது கணவரை என்னிடம் ஒப்படைத்திருந்தனர்.

இதன் பின்னர் தொழில் இன்றி மிகுந்த கஷ்;டப்பட்டு பனையோலை பின்னும் வேலை செய்து வந்தோம். மூன்று மாதங்களுக்கு பின்னர் மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக் கல்லூரியிலுள்ள சிற்றுண்டிச்சாலையை எடுத்து நடத்தி வருகின்றோம்' என்றார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .