2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கரைச்சி, கண்டாவளைக்கு விரைவில் குடிநீர் விநியோகம்

George   / 2016 மே 03 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

'கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை ஆகிய பிரதேசங்களுக்கான குடிநீர் விநியோகத் திட்டத்துக்கான கட்டுமானப் பணிகள், எதிர்வரும் ஜூலை மாதத்துக்குள் நிறைவு செய்யப்படும்' என நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த யுத்தம் காரணமாக கரைச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் குடிநீர் விநியோகம் அழிவடைந்தது. குடிநீர் விநியோகத் திட்டத்தை மீளச்சீரமைக்கும் வகையில் ஜப்;பானிய மற்றும் இலங்கை அரசின் நிதியுதவியுடன் கட்டுமானப்பணிகள், கடந்த 2013ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்டன.

கட்டுமானப் பணிகள், கடந்த 2015 ஆண்டு முற்பகுதியில் நிறைவு செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதும் பணிகள் இதுவரை பூர்த்திச்செய்யப்படாமல் உள்ளன.

இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் திங்கட்கிழமை (02) நடைபெற்ற நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்;கல் தொடர்பான கூட்டத்தில் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் கருத்துக்கூறுகையில்,

'கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில், 17 கிராமஅலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் 40 ஆயிரம் குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் இந்தச் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 

இதற்கு ஜப்பானிய அரசாங்கம் 925 மில்லியன் ரூபாயையும், இலங்கை அரசாங்கம் 740 மில்லியன் ரூபாயையும் நிதியுதவியளித்தன. 2013ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் ஆரம்பமான இதன் கட்டுமானத்தில் தற்போது, 77.59 வீதமான பணிகள் நிறைவுபெற்றுள்ளன. ஜூலை மாதத்துக்குள் எஞ்சிய பணிகளும் பூர்த்தியாகும்.

இந்தத் திட்டத்தில், கண்டாவளைப் பிரதேசத்துக்கான குடிநீர் தாங்கி, பரந்;தன் குமரபுரம் பகுதியிலும் கரைச்சி பிரதேசத்துக்கான குடிநீர் தாங்கி, கிளிநொச்சி இரத்தினபுரம் வீதியிலும் அமைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், கிளிநொச்சி குளத்திலிருந்து நீரை பெற்று சுத்திகரித்து குடிநீராக்கும் ஆலை உருவாக்கப்படுதலும் இந்த திட்டத்தில் உள்ளடங்குகின்றது.

தற்போது குழாய்கள் பொருத்தும் பணிகள் முன்னெடுக்;கப்பட்டு வருகின்றன. குழாய்கள் பொருத்தும் போது குறிப்பிட்ட சில பகுதிகளில் வெடிபொருட்கள் காணப்பட்டமையினால் இதன் பணிகளை முன்னெடுப்பதில் தாமதங்கள் ஏற்பட்டன' என அவர்கள் மேலும் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .