2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தேசிய கல்வியற் கல்லூரியின் முத்தமிழ் விழா

Princiya Dixci   / 2016 மே 03 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி. விஜயவாசகன்

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரியின் முத்தமிழ் விழா, கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள பேராசிரியர் வேலுப்பிள்ளை அரங்கில் எதிர்வரும் 7ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு நடைபெறவுள்ளது. 

கல்லூரி பீடாதிபதி சதாசிவம் அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில், பிரதம விருந்தினராக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கலந்துகொள்ளவுள்ளார்.

சிறப்பு விருந்தினராக தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை முதுநிலை விரிவுரையாளர் க. இரகுமரன், கௌரவ விருந்தினர்களாக  கொக்குவில் இந்துக்கல்லூரி அதிபர் வே.ஞானகாந்தன், இலங்கை வங்கி யாழ். ஸ்ரான்லி வீதி கிளை முகாமையாளர் கு.சிவஞானசுந்தரம் மற்றும் நிறைவேற்று அதிகாரி த.கணேசமூர்த்தி ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது, 'வீரசங்கிலி' எனும் மலரை உபபீடாதிபதி கலாநிதி பா.தனபாலன் வெளியிட்டு, உரைநிகழ்த்துவார்.

நூலின் முதற்பிரதியை பரமேஸ்வரி சிவகுமாரன் பெற்றுக்கொள்ளவுள்ளார். 

இதேவேளை, இசை நிகழ்வுகள், பட்டிமன்றம், 'சங்கிலி' எனும் நாடகம் போன்ற கலைநிகழ்வுகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .