2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

'சில பாடசாலைகள் நண்பகலுடன் மூடப்படவில்லை'

Suganthini Ratnam   / 2016 மே 03 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார், ஏ.எச்.ஏ.ஹுஸைன்,ஏ.எம்.ஏ.பரீட்

தற்போது நிலவுகின்ற கடும் வெப்பமான காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகள் நண்பகல் 12 மணியுடன் மூடுமாறு பணிக்கப்பட்ட போதிலும், சில பாடசாலைகள் வழமையான நேரத்துக்கே இன்று செவ்வாய்க்கிழமை மூடப்பட்டதாக தெரியவருகின்றது.

தேசியப் பாடசாலைகள் சிலவற்றை 12 மணிக்கு மூடுவதற்கு வலயக் கல்வி அதிகாரிகள் அனுமதிக்காததால் மாணவர்கள், ஆசிரியர்கள் அதிபர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுவதாகவும் தெரியவருகின்றது.

கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில் திங்கட்கிழமை (02) வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன் நடைபெற்ற கல்வி அபிவிருத்திக் கூட்டத்தின்போது, வெப்பமான காலநிலையைக் கருத்திற்கொண்டு கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளை நண்பகல் 12 மணியுடன் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு  மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாமுக்கு அம்மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி பணித்தார்.

இது தொடர்பில் திருக்கோவில் கல்வி வலயப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜனிடம் கேட்டபோது, 'முன்னதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை அனைத்து பாடசாலைகளும் 12 மணி வரை மூடப்பட வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. பின்னர் மத்திய அரசாங்கத்துக்கு கீழ் செயற்படும் தேசிய பாடசாலைகளுக்கு இந்த அறிவித்தல் பொருத்தமற்றது என மாகாண கல்வி அமைச்சால் தெரிவிக்கப்பட்டது. எனினும், இவ்விடயம் தொடர்பில் திருகோணமலையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது' என்றார்.

இருப்பினும் திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா, கந்தளாய் உள்ளிட்ட பகுதிகளில் நண்பகல் 12 மணியுடன் மூடப்பட்டதாக தெரியவருகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .