2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

துருக்கியர்களுக்கு விசா இன்றி பயணம்: நாளை முன்மொழிகின்றது ஐரோப்பிய ஒன்றியம்

Shanmugan Murugavel   / 2016 மே 03 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடவுச்சீட்டையும் வேறு எந்தவிதமான எல்லைக் கட்டுப்பாட்டையும் நீக்கியுள்ள 26 ஐரோப்பிய நாடுகளுகளின் பகுதியான ஷேங்கன் பிரதேசத்துக்குள் துருக்கியர்கள் விசா இன்றி பயணம் செய்வதற்கான முன்மொழிவு, நாளை புதன்கிழமை (04) ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவால் முன்வைக்கப்படவுள்ளதாக தகவல் மூலங்கள் தெரிவித்துள்ளன.

மேற்படி நகர்வானது, ஏஜியன் கடலைக் கடந்து கிரேக்கத்துக்குச் செல்லும் புகலிடக்கோரிக்கையாளர்களை மீண்டும் ஏற்கும் உடன்பாட்டின் ஒரு அங்கமே என்றபோதும் பேச்சு சுதந்திரம், நீதியான விசாரணை, பயங்கரவாத சட்டங்களின் சீர்திருத்தி சிறுபான்மையின உரிமைகளை பாதுகாத்தல் போன்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டளைகளை துருக்கி கட்டாயம் நிறைவேற்றவேண்டியுள்ளது.

எனினும் விசா உடன்பாடு தாமதப்படுத்தப்பட்டால், புகலிடக்கோரிக்கையாளர்களை நிறுத்தும் துருக்கியின் ஈடுபாடும் தாமதப்படுத்தப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அஞ்சுகிறது.

துருக்கியிலிருந்தும் வட ஆபிரிக்காவிலிருந்தும் பாரிய எண்ணிக்கையில் ஐரோப்பாவை வந்தடைகின்ற புகலிடக்கோரிக்கையாளர்களும் அகதிகளாலும் ஐரோப்பிய நாடுகளிடையே அரசியல் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் துருக்கிக்குமான உடன்படிக்கையின்படி, மார்ச் 20ஆம் திகதி முதல் கிரேக்கத்துக்கு சட்டவிரோதமாக வந்தடைகின்ற புகலிடக்கோரிக்கையாளர்கள், புகலிடத்துக்கு விண்ணப்பிக்கவிட்டால் அல்லது அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் அவர்கள் துருக்கிக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள். துருக்கிக்கு மீளத்திரும்பும் ஒவ்வொரு புகலிடக்கோரிக்கையாளருக்கு பதிலாக புகலிடம் பெறக்கூடிய இன்னொரு சிரியரை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .