2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலியாவின் கொள்கைகளில் மாற்றமில்லை

Shanmugan Murugavel   / 2016 மே 03 , பி.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவ்ரு அகதி முகாமிலிருந்த 21 வயதான சோமாலியப் பெண்ணொருவர், தன்னைத் தானே தீமூட்டிக் கொண்டு, ஆபத்தான நிலையில் காணப்படுகின்ற போதிலும், குடிவரவு, குடியேற்றம் தொடர்பான அவுஸ்திரேலியாவின் கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்படாது என, திட்டவட்டமாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவுஸ்திரேலியாவின் குடிவரவு அமைச்சர் பீற்றர் டுட்டன், எந்தச் செயற்பாடுமே, அவுஸ்திரேலியாவின் போக்கிலிருந்து அந்நாட்டை மாற்றாது எனத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகள், அண்மைக்காலத்தில் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்த அவர், இவ்வாறான செயற்பாடுகள் மூலமாக, அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கு அழுத்தத்தை வழங்கி, அவர்களை அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்க வைக்க அவர்கள் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

இவ்வாறான நடவடிக்கைகளுக்கு, அகதிகளுக்கான செயற்பாட்டாளர்களைக் குற்றஞ்சாட்டிய அவர், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதை அவர்கள் ஊக்குவிப்பதாகத் தெரிவித்தார்.

'நவ்ரு தீவில் ஏற்பட்டுள்ள அண்மைக்காலச் செயற்பாடுகள், வாழும் நிலைமைகளுக்கு எதிரான போராட்டங்கள் அன்று. சுகாதாரப் பராமரிப்புக்கெதிரான போராட்டங்கள் அன்று. குறைவான நிதியாதரவுக்கெதிரான போராட்டங்கள் அன்று" என அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .