2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சான்றுகளை கோட்டா சமர்ப்பிக்கவில்லை: 27 வரை வழக்கு ஒத்திவைப்பு

Gavitha   / 2016 மே 04 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் ஐவருக்கு எதிராக, கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஜூரி சபை இல்லாத வழக்கு விசாரணைகள், எதிர்வரும் ஜூன் மாதம் 27ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கின் சாட்சியாளரான பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நீதிமன்றத்தில் சாட்சியங்களை ஒப்படைக்காததாலேயே இந்த வழக்கு, நேற்று (03) ஒத்திவைக்கப்பட்டது.

ஜூரி சபை இல்லாத விசாரணைகளுக்காக, குறித்த ஐந்து சந்தேக நபர்களான பொன்னுசாமி கார்த்திகேசு, சிவலிங்கம் அரூரன், பி.ஷர்மா, சந்திரபோஸ் சோமராஜ் மற்றும் வேலுசாமி பரம்தேவன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். எனினும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர், சாட்சியங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமையால், வழக்கின் அடுத்த தவணையின் போது சாட்சியங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கோரி, வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தமிழீழ விடுதலை புலிகளின் கிளர்ச்சியின் போது, அப்போதிருந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்வதற்கு முயற்சித்தார்கள் என்று, குறித்த ஐவருக்கும் எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரம் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X