2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

கையெழுத்துகள் உண்மையாயின் சர்வஜன வாக்கெடுப்புக்குத் தயார்: வெனிசுவேலா ஜனாதிபதி

Shanmugan Murugavel   / 2016 மே 04 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனக்கெதிரான மனுவில் கைச்சாத்திடப்பட்ட 1.85 மில்லியன் கையெழுத்துகளும் உண்மையென உறுதிப்படுத்தப்படுமாயின், ஜனாதிபதிப் பதவியிலிருந்து தன்னை நீக்குவதற்கான சர்வஜன வாக்கெடுப்புக்குத் தயாராக உள்ளதாக, வெனிசுவேலாவின் ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை நெருக்கடிக்குள் தள்ளியதாகக் குற்றஞ்சாட்டி, ஜனாதிபதியைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான சர்வஜன வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டுமெனக் கோரி, எதிரணிகள் இணைந்து, மனுவொன்றைக் கடந்த திங்கட்கிழமை வழங்கியிருந்தன.

நாட்டில் சர்வஜன வாக்கெடுப்பைக் கோருவதற்குத் தேவையான கையெழுத்துகளை விட 9க்கும் மேற்பட்ட மடங்கு எண்ணிக்கையான 1.85 மில்லியன் கையெழுத்துகளை, தேசிய தேர்தல் சபையிடம் கையளித்ததாக, எதிரணி தெரிவித்திருந்தது.

இந்நிலையிலேயே, அந்தக் கையெழுத்துகள் உறுதிப்படுத்தப்பட்டால், வேறு பேச்சின்றி, சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லவுள்ளதாக, ஜனாதிபதி தெரிவித்தார். தனது வாராந்த வானொலிப் பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மதுரோவின் எதிரணியினரைப் பொறுத்தவரை, இவ்வாண்டு இறுதிக்குள் சர்வஜன வாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டுமென்பது அவர்களது கோரிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .