பிரபல எழுத்தாளர் ஹோல்ம்ஸ்ட்ரோம் காலமானார்
08-05-2016 02:04 PM
Comments - 0       Views - 131

பிரபல எழுத்தாளரும் மொழிப்பெயர்ப்பாளருமான லட்சுமி ஹோல்ம்ஸ்ட்ரோம், தனது 80ஆவது வயதில் இங்கிலாந்தில் இன்று (08) காலமானார்.

சென்னை பல்கலைக்கழகத்திலும், ஓக்ஸ்ப்போட் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்ற இவர், தனது ஆங்கில மொழிப்பெயர்ப்பின் மூலம் தமிழின் சிறப்பை உலகறியச் செய்தார்.

இவர், மௌனி, புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ந.முத்துசாமி, அம்பை, பாமா, இமையம் போன்றவர்களின் படைப்புகளை ஆங்கிலத்துக்கு மொழிப்பெயர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து, கனடா, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் மொழிபெயர்ப்புப் பட்டறைகளை நடத்தித் தமிழ் ஆக்கங்களை, ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்வதற்குப் புதியவர்களை ஊக்குவிப்பதில் பெரும் பங்காற்றி வந்தார்.

சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரு காவியங்களையும் வசன நடையில் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்ட பெருமை இவரை சாரும். நவீன தமிழ் இலக்கியங்கள் பற்றியும் பல கட்டுரைகளை ஆங்கில இதழ்களில் ஹோல்ம்ஸ்ட்ரோம் எழுதியுள்ளார்.

 

 

"பிரபல எழுத்தாளர் ஹோல்ம்ஸ்ட்ரோம் காலமானார்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty