என் காதல்...
13-05-2016 11:08 AM
Comments - 0       Views - 317

அவளின் முகம் பார்த்தால் போதும்
நாவுகள் கட்டுண்டு
வார்த்தைகள் சிறைப்பட்டு
வெட்கம் ஆழப் பாயும்
அக்கணத்தில்
காட்சிகள் ஏதும் தோன்றாது
மனமோ கோட்டைகட்ட
எல்லாம் மாயமாய்த் தோன்ற
மதி மயங்கிட
எங்கிருந்தோ வந்தமர்கின்றது மரியாதை...

காதல் போதையில் பிடித்த பித்து
பிதற்றுகையில் புரியும்
காற்றும் வசப்பட்டது
வானம்
அதில் உள்ள நட்சத்திரங்கள்
ஓடும் மேகம்
எல்லாமும் வசப்பட்டது
ஆயினும் பரிதாபம்
காதலைச் சொல்ல
நான்கு வார்த்தைகள் வசப்படாமற் போயிற்று

இதயமதும் துடித்தே
விழுந்து விடுமாப் போல
நெஞ்சு படபடக்க
வேர்வைத்துளிகளின் ஈரம்
உடல்பற்ற
காய்ந்த உதடுகளில் ஏதோ
மாயமாய் உரசிச் செல்கின்றது...
சொல்ல நினைக்கையில் காதல்
மிரண்டுபோகின்றது...

மாய உலகில்
அந்தரத்தில் பறந்தபடி
அவளின் நினைவுகளோடு மட்டும்
கனவில் உலாப் போகிறது
மனது...

-அசாம் அப்துல்லாஹ்

"என் காதல்..." இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty