மகனை பார்க்க சென்ற தாய்...
17-05-2016 09:39 AM
Comments - 0       Views - 1089

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 2014ஆம் ஆண்டு இந்தியப் பிரதமராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர். அவர், தன்னுடைய உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலேயே வசித்து வருகின்றார். 

அந்த வாசஸ்தலத்துக்கு, முதன்முறையாக வருகைதந்துள்ள தன்னுடைய தாயை, பிரதமர் நரேந்திர மோடி கவனித்துக்கொண்டமை தொடர்பிலான படங்கள் சில, அவருடைய சமூக வலைத்தளத்தில் வெளிவந்துள்ளன.

90 வயதான தாய், குஜராத் வீட்டில் வசித்துவருகின்றார்.  

தன்னுடைய தாயைப் பார்ப்பதற்கு பிரதமர் மோடி, அவ்வீட்டுக்குப் பல தடவைகள் சென்றிருந்தாலும், அவருடைய தாய், மகனைப் பார்ப்பதற்கு வந்தமை இதுவே முதன்முறையாகும்.

"மகனை பார்க்க சென்ற தாய்..." இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty