2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கண்டி திரித்துவ கல்லூரியின் றக்பி 2016க்கு மஞ்சி அனுசரணை

Gavitha   / 2016 மே 17 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட் மீண்டுமொருமுறை பாடசாலை மட்ட விளையாட்டு போட்டிகளுக்காக தனது அனுசரணையை வழங்க முன்வந்துள்ளது. இலங்கையின் முதல் தர பிஸ்கட் வர்த்தக நாமமான மஞ்சி முதல் முறையாக 2016ஆம் ஆண்டுக்கான றக்பி பருவகாலத்தில் திரித்துவ கல்லூரிக்கு அனுசரணை வழங்கவுள்ளது. 1872ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட கண்டி திரித்துவக் கல்லூரி நாட்டின் தலைசிறந்த பாடசாலைகளுள் ஒன்றாகவுள்ளதுடன், சிறந்த றக்பி பாரம்பரியத்தையும் கொண்டுள்ளது. இலங்கையில் பாடசாலை மட்ட விளையாட்டுகளை மேம்படுத்தும் குறிக்கோளுடன் மஞ்சி இந்த விளையாட்டுக்கு அனுசரணை வழங்கவுள்ளது.

திரித்துவக் கல்லூரியின் றக்பி விளையாட்டுக்கான பங்களிப்பு குறித்து சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் குழு பொது முகாமையாளர் தேஜா பீரிஸ் கருத்து தெரிவிக்கையில், 'கண்டி திரித்துவக் கல்லூரி
றக்பி அணியினரின் 2016 பருவகால றக்பி விளையாட்டின் அனுசரணையாளராக இணைந்து கொண்டுள்ளமையையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இலங்கையில் றக்பி விளையாடும் பாடசாலைகளுக்கு மத்தியில் உயர் பாரம்பரிய வரலாற்றை திரித்துவ கல்லூரி கொண்டுள்ளது.

திரித்துவ கல்லூரியின் ரக்பி விளையாட்டை வலுவூட்டுவதற்கான ஆதரவை மஞ்சி தொடர்ந்து வழங்கவுள்ளதுடன், பாடசாலை றக்பி விளையாட்டின் மரபுகளை மேம்படுத்த எதிர்பார்த்துள்ளது' என தெரிவித்தார். அனைத்து வயதுப்பிரிவினரினதும் றக்பி திறமையை மேலாண்மை செய்துவரும் பழைய திரித்துவ ரக்பியும் ((OTRS)) மற்றும் கல்லூரி சங்கத்தின் தலைவருமான ரொஷான் அபயகோன் 'திரித்துவ றக்பி' நாமத்தின் மேம்பாட்டுக்காக மகத்தான ஆதரவை வழங்கும் மஞ்சிக்கு தமது நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.

'இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து பாடசாலை மட்ட விளையாட்டு போட்டிகளுக்கு அனுசரணை வழங்கிவரும் குறிப்பிடத்தக்க நிறுவனங்களுள் ஒன்றாக மஞ்சி திகழ்கிறது. எமது அணிக்கான மஞ்சியின் அனுசரணை குறித்து நாம் மிகவும் மகிழ்ச்சியடைவதுடன், 2016ஆம் ஆண்டுக்கான திரித்துவக்கல்லூரி றக்பி போட்டிகளில் 1இல் தர பிஸ்கட் வர்த்தக நாமமான மஞ்சி இணை அனுசரணையாளராக இணைந்துள்ளமை பெருமையளிப்பதாகவும் உள்ளது. மஞ்சியுடனான அனுசரணையை எதிர்காலத்திலும் தொடர எதிர்பார்த்துள்ளோம்' என அபயகோன் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X