கட்டாயத் திருமண முயற்சி: இளைஞனைக் கடத்திய யுவதி கைது
19-05-2016 12:19 PM
Comments - 0       Views - 1328

23 வயதான இளைஞர் ஒருவரைக் கடத்தி திருமணம் செய்துகொள்ள பலவந்தப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 25 வயதான யுவதி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம், மாத்தறையில் நேற்று புதன்கிழமை (18) இடம்பெற்றுள்ளது.

முகநூலின் ஊடாக இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட நட்பை அடுத்தே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

02 முச்சக்கரவண்டியில் வந்த யுவதி, இராணுவ வீரர் ஒருவர் உட்பட 06 பேரைக் கொண்டு இளைஞனைக் கடத்தியுள்ளார்.

இது தொடர்பில் இளைஞனின் நண்பர் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு யுவதியைக் கைதுசெய்துள்ளனர். 

தான் வெளிநாடு செல்லவுள்ளதாகக் கூறி, யுவதியுடனான நட்பை இளைஞன் முறித்துக்கொண்டதையடுத்து கடும் கோபத்துக்குள்ளான நிலையிலேயே யுவதி, அவரைக் கடத்தியுள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

"கட்டாயத் திருமண முயற்சி: இளைஞனைக் கடத்திய யுவதி கைது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty