விபத்தில் இருவர் பலி; மூவருக்கு காயம்
24-05-2016 10:55 AM
Comments - 0       Views - 58

இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததுடன், பெண்ணொருவர் உட்பட மூவர் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து, அம்பலாங்கொடை, உஸ்மடுலாவப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை (23) இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த இருவர், பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அம்பலாங்கொடைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

"விபத்தில் இருவர் பலி; மூவருக்கு காயம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty