2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

உதவுகின்ற மனப்பான்மையை சிறுவர்களின் உள்ளங்களில் வளர்க்க வேண்டும்

Niroshini   / 2016 மே 25 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

இயற்கை அனர்த்தங்களாலோ அல்லது வேறு அனர்தங்களாலோ பாதிக்கப்படுகின்ற ஒரு சமுகத்துக்கு தாராளமாக உதவுகின்ற மனப்பான்மையை பாடசாலைகளினூடாக சிறுவர்களின்  உள்ளங்களில் ஏற்படுத்துவதன் மூலம் நாட்டுக்குத் தேவையான சிறந்த பிiஜைகளை எதிர் காலத்தில் உருவாக்க முடியுமென திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

கடந்த வருடம் கிண்ணியா முஸ்லிம் மகளீர் மகா வித்தியாலயத்தில் இருந்து  5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (24) நடைபெற்றது.

அதிபர் திருமதி என்.எஸ்.அமீன்வாரி தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இந்த நாடடில் கல்வியினூடாகவே சக வாழ்வையும் சமாதானத்தையும் கட்டியெழுப்ப முடியும். சக வாழ்வும் சமாதானமுமே நீடித்த நிலையான அபிவிருத்திக்கு உதவ முடியும். இன்றைய நவீன உலகில் சிறுவர்களும் பெண்களுமே பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்து வருகின்றார்கள். இவற்றுக்கு ஈடுகொடுக்க கூடிய வகையில் கற்றல் கற்பித்தலில் பல்Nவுறு மாற்றங்களைக் கொண்டு வருதல் வேண்டும்.

ஒரு பாடசாலையின் கல்வி அபிவிருத்தியில் அதிபர் ஆசிரியர்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமோ, அதேபோன்றே பெற்றர்களின் பங்களிப்கு அவசியமானதாகும்.  எனது தந்தையின் காலத்தில் திருகோணமலை மாவட்ட பாடசாலைகள் பௌதீக வளத்தில் எவ்வாறு தன்னிறைவு பெற்றுக் காணப்பட்டதோ அதே போன்றுதான எனது அரசியல் காலத்திலும் இந்தப் மாவட்டத்தில் பாடசாலைகளில் காணப்படுகின்ற சகல விதமான பௌதீக வளப்பற்றாக்குறைகளையும்   வைப்பதற்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்.

அதிபர்கள் தனது பாடசாலையைப் பற்றி அதிகம் கனவு காண வேண்டும். குறிப்பிட்ட காலத்தின் பின்னர் எனது பாடசாலை இவ்வாறுதான் இருக்க வேண்டும் என ஒரு திட்டத்தை வகுத்துக்கொள்ள வேண்டும். இப்போதுதான் பாடசாலையை  நவீன ரீதியாக எதிர் நோக்குகின்ற அனைத்து சவால்களுக்குனும் முகம்கொடுக்க முடியும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .