2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கல்முனை மாநகர சபை அமர்வில் மூன்று பிரேரணைகள்

Suganthini Ratnam   / 2016 மே 25 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு எதிர்வரும் 28ஆம் திகதி மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெறவுள்ள நிலையில், அன்றைய அமர்வில் மூன்று பிரேரணைகள் முன்வைக்கப்படவுள்ளதாக அம்மாநகர சபை ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.

சாய்ந்தமருது ஆயுர்வேத மருந்தகத்தை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையாக தரம் உயர்த்துமாறு கோரும் பிரேரணையை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத் முன்வைக்கவுள்ளார்.

இதேவேளை, சேனைக்குடியிருப்புப் பிரதேசத்திலுள்ள நான்கு வீதிகளுக்கும் கல்முனை மூன்றாம்; பிரிவிலுள்ள ஒரு வீதிக்கும் பெயர் சூட்டுவதற்கான பிரேரணை மற்றும் சேனைக்குடியிருப்பு பொது விளையாட்டு மைதானத்தை கணேஷா மகா வித்தியாலயத்துக்கு கையளிக்கக் கோரும் பிரேரணையையும் மாநகர சபை உறுப்பினர் சிவஞானம் ஜெயக்குமார் முன்வைக்கவுள்ளார்.

மேலும், கொழும்பு மாநகர சபையின் முதலாவது முஸ்லிம் மேயரும் முன்னாள் சபாநாயகருமான அல்ஹாஜ் எம்.எச்.முஹம்மதின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கப்படவுள்ளது. அத்துடன், அண்மையில் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவால் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .