2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

த.மு.கூவின் தொழிற்சங்கப் போராட்டம் இன்று முதல் ஆரம்பம்

Kogilavani   / 2016 மே 26 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதர்ஷினி சாமிவேல்

தோட்டத் தொழிலாளர்களுக்குத் தற்போது வழங்கப்படும் சம்பளத் தொகையுடன் 100 ரூபாயை இணைத்து, இடைக்கால நிவாரணத் தொகையாக வழங்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை, இழுபறி நிலையில் முடிவடைந் -தமையால், தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்கெனவே அறிவித்திருந்த தொழிற்சங்கப் போராட்டம், தமிழ் முற்போக்குக் கூட்டணி ஏற்கெனவே அறிவித்திருந்த தொழிற்சங்கப் போராட்டம், இன்று (26) 10.30 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக ஆரம்பமாகவுள்ளதாக அக்கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு, இடைக்காக நிவாரணமாக 100 ரூபாயைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், பெருந்தோட்ட தொழிற்சங்க சம்மேளனம் மற்றும் தொழில் அமைச்சர், கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கப் பிரதிநிதிகள், தோட்ட நிறுவன சம்மேளனப் பிரதிநிதிகள், தொழில் ஆணையாளர் ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை, தீர்மானம் இன்றி முடிவடைந்தமையால், தமிழ் முற்போக்குக் கூட்டணி, தனது தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்கும் எனவும் அவர் கூறினார்.

'கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை, மீண்டும் கைச்சாத்திடும் வரையில், இடைக்கால நிவாரணமாகவே இந்த 2,500 ரூபாயை தொழிலாளர்களுக்கு வழங்குமாறு நாம் வலியுறுத்தினோம். ஆனால், அதற்கு உடன்பாடு எட்டப்படாத நிலையிலேயே நாம், தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளோம்' என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .