2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'பங்கேற்காது முன்னணி'

Kogilavani   / 2016 மே 26 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் முற்போக்குக் கூட்டணி முன்னெடுக்கவுள்ள தொழிற்சங்க நடவடிக்கையில், மலையக மக்கள் முன்னணி பங்குபற்றாது என, அதன் உப தலைவர் ரூபன் பெருமாள் தெரிவித்தார்.

தனியார் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 2,500 ரூபாயை, தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என முன்னணி வலியுறுத்துகின்றதே தவிர, 100 ரூபாயை அல்ல. 100 ரூபாய் அதிகரிக்கப்படின், 20 நாட்கள் வேலை வழங்கப்படுமானால் 2,000 ரூபாய் மாத்திரமே கிடைக்கப்பெறும். இது, தொழிலாளர்களுக்கு பாதகமானது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. இச்சந்தர்ப்பத்தில் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு உடன்பாடில்லை என அவர் கூறினார்.

'எமது மக்களுக்கு நிரந்த தீர்வைப் பெற்றுக்கொடுக்கப் போவது கூட்டு ஒப்பந்தமாகும். கூட்டு ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் இன்று எல்லோருக்கும் புரிந்திருக்கும். எமது மக்களை அநாதைகளாக்க முடியாது. அவர்களுக்கு நிரந்தரத் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க முன்னணி, கட்டாயம் முயற்சிகளை மேற்கொள்ளும்' எனவும் ரூபன் பெருமாள் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .