2024 மார்ச் 28, வியாழக்கிழமை

'புகைத்தலால் பாதிக்கப்பட்டோரின் சுகாதார சேவைக்கு அரசாங்கம் செலவிடுகின்றது'

Suganthini Ratnam   / 2016 மே 27 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

புகைத்தல் காரணமாக இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ளோரின் சுகாதார சேவைக்காக அரசாங்கம் வருடத்திற்கு சுமார்  05 மில்லியன் ரூபாயை செலவு செய்வதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஏ.இஸ்ஸதீன் தெரிவித்தார்.

உலக புகைத்தல் தினத்தையொட்டி சமயத் தலைவர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு நடத்தப்பட்ட பல்துறை பங்காளர்களுடனான கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்தியதிகாரி பணிமனையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 'பாடசாலைகளில் இருந்தே இளமைப்; பருவத்தில் புகைப்பிடித்தல் பழக்கம் ஏற்படுகின்றது. இதனால், நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

புகைத்தல் காரணமாக பணம் விரயமாக்கப்படுவதுடன், நோய்த் தாக்கத்துக்கும் உள்ளாகும் நிலைமை உள்ளது. இலங்கையில் மட்டும் வருடத்துக்கு சுமார் 21,000 பேர்  புகைத்தல் காரணமாக உயிரிழக்கும் நிலைமை உள்ளது.
புகைத்தலினால் இலங்கையில் நாளொன்றுக்கு ஆறு பேர் இறக்கின்றனர்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X