2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

யுவதிக்கு ஆபாச வீடியோ காண்பித்த முதியவர் கைது

Sudharshini   / 2016 மே 27 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஹொமட் ஆஸிக்

கண்டி, மாத்தளை வீதியில் சென்றுகொண்டிருந்த  பஸ்ஸில்  பயணித்த முதியவர் ஒருவர், தனது அலைபேசியின் (முகப்புத்தத்தில்) மூலம், அருகில் அமர்ந்திருந்த யுவதியொருவருக்கு ஆபாச வீடியோ காட்டினார்  என்ற குற்றச்சாட்டில் அலவத்துகொடை பொலிஸாரால் வியாழக்கிழமை (27)  கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டியிலிருந்து மாத்தளை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸில் பயணித்த மேற்படி நபர்,  தனக்கு ஆபாச வீடியோ காட்டினார் என யுவதியினால் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்தே மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

  இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .