2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

சிம்பாப்வே ஜனாதிபதிக்கெதிராக எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டம்

Shanmugan Murugavel   / 2016 மே 29 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேயின் ஜனாதிபதி றொபேர்ட் முகாபேக்கு எதிராக, அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக மாற்றத்துக்கான இயக்கத்தின் ஆதரவாளர்கள், மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றை, நேற்று சனிக்கிழமை மேற்கொண்டனர். நாட்டின் பொருளாதாரத்தைச் சரிசெய்யாத நிலையில், ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென்பதே அவர்களது கோரிக்கையாக இருந்தது.

சிம்பாப்வேயின் இரண்டாவது மிகப்பெரிய நகரான புலவாயோவில் ஒன்றுகூடிய அக்கட்சியின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள், சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

92 வயதான முகாபே, 1987ஆம் ஆண்டு முதல் அந்நாட்டின் ஜனாதிபதியாக இருந்து வருகிறார். இந்நிலையில் எதிர்க் கட்சி ஆதரவாளர்கள், 'உங்களுக்கு வயது மிகவும் அதிகம் முகாபே. பதவி விலகவும்", 'முகாபே, தேர்தல்களை உங்களால் மோசடியாக மாற்ற முடியும், பொருளாதாரத்தை அவ்வாறு மாற்ற முடியாது" உட்படப் பல சுலோகங்கள் காண்பிக்கப்பட்டிருந்தன.

கட்சியின் நிறமான சிவப்பு வர்ணத்தில் ஆடைகளை அணிந்திருந்த ஆதரவாளர்களுக்கு மத்தியில் உரையாற்றிய அக்கட்சியின் பிரதித் தலைவர், முகாபேயின் அரசாங்கம் பதவி விலகும் வரைக்கும், போராட்டங்கள் தொடருமெனத் தெரிவித்தார்.

சிம்பாப்வேயில் இடம்பெறும் அரசாங்கத்துக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள், பொலிஸாரினால் வன்முறையைப் பயன்படுத்தி ஒடுக்கப்படுகின்ற போதிலும், சனிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டம், அவ்வாறான வன்முறை எதுவுமின்றியே இடம்பெற்றிருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .