2024 மார்ச் 28, வியாழக்கிழமை

'சுகாதார அமைச்சரை நீக்கவும்'

Kogilavani   / 2016 மே 30 , மு.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாநூ கார்த்திகேசு

'சுகாதார அமைச்சரை நீக்கிவிட்டு, அவ்வமைச்சுக்கு புதிய அமைச்சரை நியமியுங்கள். அவ்வாறு இல்லாவிட்டால், சுகாதார அமைச்சை ஜனாதிபதி, தனக்குக் கீழ் கொண்டுவரவேண்டும்' என்று, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நலிந்த ஹேரத் தெரிவித்தார்.

'தற்போதைய சுகாதார அமைச்சுக்குள், குடும்ப ஆட்சியே இடம்பெறுகின்றது. குடும்ப ஆட்சியை, நாட்டிலிருந்து ஜனவரி 8ஆம் திகதி ஒழித்த போதும், சுகாதார அமைச்சுக்குள் குடும்ப ஆட்சியே நிலவுகின்றது. அதனை மாற்றியமைக்க வேண்டும்.' என்றும் அவர் கோரிக்கைவிடுத்தார்.
கொழும்பில் உள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (29), நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

'ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில், வைத்தியர்களின் இடமாற்றம் மற்றும் நியமனம் தொடர்பிலான எவ்வித குழறுபடிகளும் ஏற்படவில்லை. ஆனால், தற்போதைய சுகாதார அமைச்சரின் செயற்பாட்டின் காரணமாக, சுகாதாரத்துறையின் தரமானது மேலும் கீழ் இறங்கக்கூடிய சாத்தியம் உள்ளது' எனத் தெரிவித்தார்.

'அரச வைத்திய அதிகாரிகள் சங்கமானது, சுகாதார அமைச்சின் செயற்பாடுகளில் தலையிடுகின்றது என்பது உண்மையில்லை. சுகாதார அமைச்சரும் அவரது குடும்பமுமே தலையீடுசெய்கின்றது.

சர்வதேச தரத்தில் பேணப்பட்ட இலங்கை சுகாதார சேவையின் தரத்தினைக் குறைப்பதற்கான செயற்பாடுகளையே, அமைச்சர் இச்செயற்பாட்டின் மூலம் செய்கின்றார்.  வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான மருந்து விநியோகத்தின் போதும், சுகாதார அமைச்சின் முத்திரையின் கீழ் பகிர்;ந்தளிக்காது, தமது சொந்தப் பெயரில் விநியோகிப்பகின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக, நாளை 31 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றினை, இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேற்கொள்ளவுள்ளது. வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான, கேகாலை, புத்தளம், கிளிநொச்சி, கொழும்பு, களுத்துறை, கம்பஹா என்ற ஆறுமாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளைத் தவிர ஏனைய வைத்தியசாலைகளில் வேலைநிறுத்தம் இடம்பெறும்' அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X