2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

தர்மம் குன்றாமல் வாழ்ந்து வந்தால்...

Princiya Dixci   / 2016 மே 30 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்களைத் தரிசித்தல் என்பது, மிகப் பெரும் பாக்கியமாகும். இறைவன் படைப்பில் உருவான மக்களை, அவன் வடிவிலேயே காணும் மனப்பக்குவம் எமக்கு உண்டா என்று எம்மையே நாம் கேட்போமாக.

எங்களுடன் இணைந்து உலாவரும் ஜனத்திரள்களில், யாரோ எவரோ மகா புனிதராக இருக்கலாம்.

புண்ணிய ஆத்மாக்கள் பரந்துபட்ட பூமியில் சஞ்சாரம் செய்து வருகின்றமையினாலேயே இன்னமும் இந்தப் புவனி சமநிலையில் சுற்றிவருகின்றது.

தர்மம் குன்றாமல் வாழ்ந்து வந்தால் மட்டுமே பூமி காப்பாற்றப்படும்.

மக்களை நாம் நேசித்தால் மட்டுமே, அதர்மம் செய்யும் எண்ணம் அறவே தொலையும். ஓரிரு துஷ்டர்களுக்காக மக்களை விடுத்து தூரப்போய்விடமுடியாது. மகா ஜனங்களை கௌரவிப்பதனாலே எமது ஜென்மத்தினூடான ஷேமங்களும் இணைந்து வரும். புரிந்துகொள்க. 

வாழ்வியல் தரிசனம் 30/05/2016
-பருத்தியூர் பால வயிரவ நாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .