2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மரக்கன்றுகள் வழங்கி வைப்பு

Princiya Dixci   / 2016 மே 30 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

-ஹிரான் பிரியங்கர

சூழல் உயிரியல் பல்வகைமையினைப் பாதுகாக்கும் பொருட்டு, கடற்றொழில் பெண்கள் நலன்புரி சங்கத்தின் அங்கத்தவர்களுக்கு இலவசமாக, கஜூ மரக்கன்றுகள், மாதுளை மரக்கன்றுகள் என்பன, உயிரியல் பல்வகைமையைப் பாதுகாக்கும் சங்கதினால், அண்மையில் கந்தகுழிய பகுதியில் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த மரக்கன்றுகளுக்கான நிதியினை, ஜனாதிபதி சிறப்புத் செயற்றிட்டப் பணிப்பாளர் விக்டர் அன்டனி பியன்விலவினால் பெற்றுக்கொடுக்கப்பட்டது.இந்நிகழ்வின் போது பெண்கள் நலன்புரி சங்கத்தின் அங்கத்தவர்களுக்கு 800 மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது. 

இலங்கைக்கே உரித்தான இன ஆமைகளைப் பாதுகாப்பதற்கான செயற்பாட்டினை, உயிரியல் பல்வகைமைச் சங்கம் மேற்கொண்டு வருவதாக அச்சங்கத்தின் தலைவர், பேராசிரியர் லலித் ஏகநாயக்க தெரிவித்தார். 

கற்பிட்டி அண்மித்த கடற்பரப்பினை ஆமைகளை அருகிச் செல்கின்றமையிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இவ்விடயம் தொடர்பில் அப்பகுதி மீனவர்கள் மத்தியில் அறிவுறுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .