2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

காரணமின்றி சுட்டதாக பொலிஸார் மீது முறைப்பாடு

George   / 2016 மே 30 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு – கேப்பாபுலவு மாதிரிக் கிராமத்தைச் சேர்ந்த விவேகானந்த திஜீவன் என்பவர்மீது முள்ளியவளை பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியமை தொடர்பாக வவுனியாவில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக திஜீவனின் தயான இந்திராணி கூறினார்.

வீட்டில் தனியா இருந்த 27 வயதான விவேகானந்த திஜீவன் மீது முள்ளியவளை பொலிஸார் சனிக்கிழமை மாலை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அந்தத தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எந்தவிதமான காரணமும் இன்றி, இரண்டு தடவைகள் துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட பொலிஸார், ஏன் இவ்வாறு செயற்பட்டனர் என்று தெரியவில்லை எனவும் இந்த துப்பாக்கி பிரயோகத்தில் மகனுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்து ஏழு வருடங்கள் கடந்துள்ள நிலையில் தமது கிராமத்தில் மீள்குடியமர்த்தப்படவில்லை என்றும் மாதிரி கிராமத்தில் தொழில்நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாது பல்வேறு பிரச்சினைகளுக்கு தற்போது முகம் கொடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்;.

இதேவேளை, குறித்த வீட்டுக்குச் ஞாயிற்றுக்கிழமை சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீகந்தராஜா, நடந்த சம்வத்தை கேட்டறிந்ததோடு உரியத் தீர்வினை பெற்றுத்தருவதாக உறுதியளித்துள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .