2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வெளிநாடுகளுக்கு சென்று பிரச்சினைகளை எதிர்நோக்கி இருப்பவர்கள் தொடர்பில் அறிவிக்கவும்

Sudharshini   / 2016 மே 30 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கு. புஸ்பராஜ்

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புகளைத் தேடி சென்று, தற்போது பிரச்சினைகளை எதிர்நோக்கியிருப்பவர்கள் தொடர்பில் 077-2277441 என்ற அலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு  பிரிடோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அவ்வாறு அறிவிப்பதன் ஊடாக சேவைகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வேலைவாய்ப்பு தேடி வெளிநாடுகளுக்குச் செல்லும் பெண்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கான சலுகைகள் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையை தோட்டங்கள் வாரியாக பிரிடோ நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

அந்த வகையில்  கடந்த 2015, 2016ஆம் ஆண்டுகளில் சவூதி, கட்டார் மற்றும் டுபாய் ஆகிய நாடுகளுக்கு  வேலைவாய்ப்புக்காக சென்று, உடல் மற்றும் பாலியல்   துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருந்த 17பேர், பிரிடோ நிறுவனத்தின் உதவியுடன் கடந்த மாதம் நாடு திரும்பியிருந்தனர்.

மேலும், வெளிநாட்டில் கடந்த வருடம் இறந்த இலங்கையர்களில் மூவரின் சடலங்களை  நாட்டுக்கு கொண்டுவரவும் பிரிடோ உதவியுள்ளது.

வெளிநாட்டுக்குச் சென்று அங்கு பாதிப்புகளை எதிர்நோக்கி இருப்பவர்கள் தொடர்பில், பிரிடோ நிறுவனத்திடம் முறைப்பாடு செய்யப்படுமாயின், அது தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு முறைப்பாடு செய்து பிரிடோ நிறுவனம் சம்பந்தப்ட்டவர்களை பாதுகாப்பாக மீட்டெடுக்கும் நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .