2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

22 வீடுகளை பயனாளிகளிடம் கையளிப்பதற்கான நேர்முகப் பரீட்சை

Suganthini Ratnam   / 2016 மே 31 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்

அம்பாறை. கல்முனைப் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட  இறைவெளிக்கண்டப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள தொடர்மாடி சுனாமி வீட்டுத்திட்டத்தில் 22 வீடுகளை கையளிப்பதற்கான பயனாளிகள் தெரிவுக்கான நேர்முகப் பரீட்சை கல்முனை திவிநெகும வங்கி வலய அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்முனைப் பிரதேச செயலகப் பிரிவில் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றத்துக்காக  இறைவெளிக்கண்டத்தில் 456 வீடுகளைக் கொண்டதாக  கிரீன்பீல்ட் தொடர்மாடி வீட்டுத்திட்டம் அமைக்கப்பட்டது. இதில் 434 வீடுகள் வழங்கப்பட்ட நிலையில் எஞ்சிய  22 வீடுகளையும் வழங்குவது தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டது. இதன் காரணமாக 10 வருடங்களாக இவ்வீடுகள் கையளிக்கப்படாமல் இருந்தது.  

இந்நிலையில், அம்பாறை மாவட்டச் செயலக மற்றும் கல்முனைப் பிரதேச செயலக அதிகாரிகள் முன்னெடுத்த நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்த 22 வீடுகளையும் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X