2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

'குடும்பத் தலைவிகள் ஒளி விளக்காக செயற்பட வேண்டும்'

Niroshini   / 2016 மே 31 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

குடும்பத் தலைவிகள் ஒவ்வொருவரும் அவர்களது குடும்பத்தின் தலைவனான கணவனை நல்வழிப்படுத்தவும், அதனூடாக சேமிப்புக்களைக் சிறிது சிறிதாக உயர்த்தி குடும்பப் பொருளாதாரங்களை ஸ்திரப்படுத்தும் ஒளி விளக்காக செயற்படவும் வேண்டும் என ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தெரிவித்தார்.

வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தினால் நாடாளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஆலையடிவேம்பு பிரதேச செயலத்தில் இன்று(31) நடைபெற்ற  சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினத்துக்கான கொடி விற்பனை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

புகைத்தல் மற்றும் மதுப்பாவனையால் ஆலையடிவேம்பு பிரதேசம் தொடர்ந்து முகங்கொடுத்துவரும் சமூகச் சீர்கேடுகளை இல்லாமல் செய்ய கிராம மட்ட சமுர்த்திச் சங்கங்களின் உறுப்பினர்களாக மட்டுமல்லாமல் குடும்ப தலைவிகள் எனும் உயரிய கடமையினையும் பிள்ளைகளும் தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகாத வண்ணம் பாதுகாக்கவேண்டிய பாரிய பொறுப்பினையும் ஏற்று பெண்கள்  பணியாற்ற வேண்டும் என்றார்.

கடந்த வருடம் இடம்பெற்ற சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தின கொடி விற்பனை நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேசம் மூன்றாமிடத்தைப் பெற்றமைக்குக் காரணமாக அமைந்த குறித்த கிராமமட்ட சமுர்த்திச் சங்கங்களின் உறுப்பினர்களையும் வாழ்வின் எழுச்சி அபிவிருத்திப் பிரிவின் உத்தியோகத்தர்களையும் இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X