2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

59 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள்

Suganthini Ratnam   / 2016 மே 31 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, பைசல் இஸ்மாயில்

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 59 பேருக்கு அரசாங்கத்தின் ரன்பிம திட்டத்தின் கீழ் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அம்பாறை மாவட்ட காணி உத்தியோகத்தர் கே.எல்.எம்.முஸம்மில், 'காணி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்களிடம் சென்று தமது காணிக்கான பின்னுருத்தாளியாக தமது உறவினர்களை பதிந்து கொள்ளலாம். இதன் மூலம் காலம் கடந்த பின்னர் ஏற்படும் நியாயமான பிணக்குகளை தீர்த்துக் கொள்ள முடியும்.

காணிப்பத்திரத்தில் பின்னுருத்தாளி தெரிவிக்கப்படாது உரிமையாளர் இறக்கும் சந்தர்ப்பத்தில் சட்டத்தின் படி இறந்த உரிமையாளரின் மூத்த பிள்ளைக்கே அது சொந்தமாக அமைந்துவிடும். எனவே காணி உரிமையாளரின் இறப்புக்குப் பின்னர் யார், யாருக்கு அதனை பங்கீடு செய்ய வேண்டும் என்ற தகவல்கள் உரிய முறைப்படி வழங்கப்பட்டிருப்பின் பிற்காலத்தில் பிணக்குகளிலிருந்து விடுபட முடியும்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .