2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மோசடி, முறைகேடுகள் குறித்துஐவரிடம் வாக்குமூலம்

Gavitha   / 2016 ஜூன் 01 , மு.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதிமோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பில் ஐவரிடம், நேற்றுச் செவ்வாய்க்கிழமை வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடமே அவர்கள் வாக்குமூலமளித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்திலிருந்து காணாமற்போனதாகக் கூறப்படும் வாகனங்கள் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வாக்குமூலமளித்துள்ளார்.

 ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை, அனுமதியின்றிப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில், தேசிய சுதந்திர முன்னணியின் ஏற்பாட்டாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயந்த சமரவீர வாக்குமூலமளித்துள்ளார்.

இதேவேளை, அவன்ட் கார்ட் நிறுவனத்தின் முக்கியஸ்தரான ஓய்வுபெற்ற மேஜர் நிசங்க சேனாதிபதியும், பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவில் நேற்றையதினம் வாக்குமூலமளித்துள்ளார்.

அத்துடன்,  ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நடைபெற்ற உற்சவமொன்றின் போது நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சியின் போது, நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுத் தொடர்பில் பிரபல பாடகரும் மேரியன்ஸ் இசைக்குழுவின் தலைவருமான நளின் பெரேரா வாக்குமூலமளித்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் அமைச்சரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹலிய ரம்புக்வெலவுக்கு, கடந்த ஆட்சியின் போது, ஜனாதிபதி நிதியத்திலிருந்து சத்திரசிகிச்சைக்காக நிதிவழங்கப்பட்டது என்று கூறியமை தொடர்பில் சமூக வலுவூட்டல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, நேற்றையதினம் வாக்குமூலமளித்துள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .