2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

'குறைக்கவே கூட்டினோம்'

Gavitha   / 2016 ஜூன் 01 , மு.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கவிதா சுப்ரமணியம்

'நாட்டில் தற்போது காணப்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கிலேயே, வாகனங்களின் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்த நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, தற்போது முன்னெடுக்கப்படும் வீதி அபிவிருத்திப் பணிகள் நிறைவடையும் வரை மாத்திரமே, வாகனங்களுக்கான விலைகள் அதிகரிக்கப்பட்டிருக்கும்' என்றும் தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே, அவர்  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

'வாகனங்கள் கொள்வனவு செய்யப்படும் அளவு, 2014ஆம் ஆண்டு 40,000 ஆக இருந்தது. எனினும், அது கடந்த வருடம், 90,000 ஆக அதிகரித்துள்ளது. தகுதிக்குக் குறைவான விலைக் கூறு முறையில் வாகனங்களை கொள்வனவு  செய்கின்றமை, இதற்கான காரணமாகும். இதுவரை, சுமார் 55,000 வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. நாட்டு மக்களின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். இதனாலேயே, வாகனங்களின் விலைகளை அதிகரிக்கின்றோம்' என்று அவர் கூறினார்.

'வாகன விற்பனையாளர்கள் பலரது கோரிக்கைகளை ஏற்றே, இவ்வாறான தீர்மானங்களைஅரசாங்கம்  நிறைவேற்றுகின்றது. வாகனங்களின் விலைகள் அதிகரித்தாலும், சாதாரண மக்கள் பயன்படுத்தும் 15 வாகனங்களின் விலைகள் குறைந்துள்ளன. பணக்காரர்கள் பயன்படுத்தும் கார்களின் விலைகளே அதிகரிக்கப்பட்டுள்ளன. நாட்டில், தற்போது 10 இலட்சத்துக்கும் அதிகமான முச்சக்கரவண்டிகள் உள்ளன. உயர்தரக் கல்வியை நிறைவு செய்யும் ஒவ்வொரு இளைஞனும் முச்சக்கரவண்டியொன்றைக் கொள்வனவு செய்துக்கொண்டு, முச்சக்கரவண்டி ஓட்டுநராகவே தங்களது வாழ்க்கையைக் கழித்து வருகின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக, அரசாங்கத்துக்குத் தேவைப்படும் இளைய சமுதாய ஊழியர்களின் தொகை குறைவடைந்துள்ளது. இதனால், முச்சக்கரவண்டி சங்கத்தின் கோரிக்கைக்கு இணங்கவே, முச்சக்கரவண்டிகளின் விலைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தினோம்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .