2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வெள்ள அனர்த்தம்: மாணவர்களுக்கு உதவி

Gavitha   / 2016 ஜூன் 01 , மு.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு சீருடை, பாதணிகள், பாட புத்தங்கள் மற்றும் பயிற்சி புத்தங்கள் என்பன வழங்கப்படும் என இராஜாங்க கல்வி அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

'தொடர்ந்து நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக பல பாடசாலைகளுக்குள் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். இதனால், மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. எனினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களுக்கான மாற்று நடவடிக்கை எடுக்கும் வரை மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் இடைநிறுத்தப்படும்' என்று அவர் தெரிவித்தார்.

'எனினும், பரீட்சையை எதிர்நோக்கியுள்ள மாணவர்கள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்தி, அவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகளை மாற்று இடங்களில் மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றும் அவர் தெரிவித்தார்.

'சில இடங்களில் பாடசாலை கட்டடங்கள் முழுமையாக சேதமடைந்துள்ளதால், அங்குள்ள மாணவர்களை அருகிலுள்ள பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்' என அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X