2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

இலங்கை அபிவிருத்திக்கு ரூ.600 பில்லியன் கடனுதவி

Gavitha   / 2016 ஜூன் 01 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கவிதா சுப்ரமணியம்

இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு ஜப்பான் அரசாங்கம், இலங்கை அரசாங்கத்துக்கு 44,000 பில்லியன் யென் கடன் வழங்குவதற்கு இணங்கியுள்ளதாக, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

கடந்த 26, 27ஆம் திகதிகளில் ஜப்பானில் இடம்பெற்ற 42ஆவது ஜி7 மாநாடு குறித்தும் இதன்போது எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு, நேற்று செவ்வாய்க்கிழமை (31) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

'கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஜனாதிபதிக்கும் ஜப்பான் அரசாங்கத்துக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில், இம்முறை இடம்பெற்ற ஜி7 மாநாடு முடிவடைந்த பின்னர் கலந்துரையாடப்பட்டது.

ஜப்பானின் மூலம் இலங்கைக்கு கிடைக்கப்பெறும் நிதியுதவிகள் ஐந்தாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

அபிவிருத்திக் கொள்கை கடன், ஜப்பானின் பிணைமுறி விவகாரம் தொடர்பில் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர், கமத்தொழில் அபிவிருத்திக்கான நிதி, துறைமுக அபிவிருத்திக்கு நிதி வழங்கப்படவுள்ளதுடன் தெற்கு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் அபிவிருத்திக்கு எமது நாட்டு ஜனாதிபதியின் அனுமதியை, ஜப்பான் நாட்டு ஜனாதிபதி கோரியிருந்தார்' என்று அவர் தெரிவித்தார்.

மேலும், 'திருகோணமலையிலுள்ள கப்பல் பட்டறையை, கண்டி நகரை அபிவிருத்தி தொழில்நுட்ப அடிப்படையில் அபிவிருத்தி செய்வதற்கான முழு அபிவிருத்தி செலவுகளுக்குமாகவே, இந்த 44,000 பில்லியன் யென் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது. இது குறைந்த வட்டியான 0.01 என்ற அடிப்படையில் 40 வருடங்களுக்கு செலுத்தி முடிக்கப்படும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, 4.5 பில்லியன் ரூபாய் அமெரிக்க டொலர் என்ற அடிப்படையில் இலங்கை ரூபாயின் படி 600 பில்லியன் ரூபாய் கடனாக வழங்கப்படவுள்ளது' என்று அவர் குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .