2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

களுப்பஹன மக்களுக்கு கூடாரங்கள் இல்லை

Kogilavani   / 2016 ஜூன் 01 , மு.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

புளத்கோஹுப்பிட்டிய, களுப்பஹன மக்களுக்கு இதுவரை கூடாரங்கள் அமைத்துக் கொடுக்கப்படவில்லை என்றும் அனர்த்தம் காரணமாக வெளியேற்றப்பட்டவர்களில் 30 குடும்பங்கள் தோட்ட காம்பராக்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேகாலை மாவட்டம் களுப்பஹன தோட்டத்தில் கடந்த 15ஆம் திகதி இரவு, 9.45 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இத்தோட்டத்தைச் சேர்ந்த 16 பேர் மண்ணுள் புதையுண்டதுடன் 200க்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர். இம்மண்சரிவினால் 10 வீடுகளைக் கொண்ட லயன் குடியிருப்பில் 4 வீடுகள் முற்றாக சேதமடைந்தன.

இந்நிலையில் இத்தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டு பாடசாலையொன்றில் தங்க வைக்கப்பட்ட மக்கள், 15 நாட்களுக்குப் பின்னர், மீண்டும் கடந்த 29ஆம் திகதி பலவந்தமாக தமது குடியிருப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்கள் வசிப்பதற்கு தற்காலிக கூடாரங்கள் அமைத்துக்கொடுக்கப்படும் என பிரதேச செயலகத்தினால் கூறப்பட்டப்போதிலும் இதுவரை எவ்வித கூடாரங்களும் அமைத்துக் கொடுக்கப்படவில்லை எனவும் 30 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 80 பேர் தோட்ட குவாட்டஸ்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. பலர் மீண்டும் அவர்களது சொந்தக் குடியிருப்புகளுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை தற்காலிக கூடாரங்களில் தங்க வைப்பதற்காக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதயாய அபிவிருத்தி அமைச்சினால் இத்தோட்டத்து 85 கூடாரங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .