2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

புதிய சொகுசு வீட்டுத் தொகுதியை அறிமுகம் செய்தது கோறல் ஹோல்டிங்ஸ்

Gavitha   / 2016 ஜூன் 01 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முன்னணி நிர்மாணத்துறை நிறுவனங்களில் ஒன்றான கோறல் ஹோல்டிங்ஸ் நிறுவனம், புதிய சொகுசு வீட்டுத் தொகுதியொன்றை, கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிமுகம் செய்தது.

இல. 40, றிட்ஜ்வே பிளேஸ், கொழும்பு 04இல் அமையவுள்ள கோறல் பிளஸ் என்ற இந்த வீட்டுத் தொகுதியை அறிமுகம் செய்யும் நிகழ்வில், நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, விசேட விருந்தினராகக் கலந்துகொண்டார்.

குடியிருப்பு மாடிகள் எட்டைக் கொண்ட இந்தத் தொகுதியில், 24 வீடுகள் அமையவுள்ளதோடு, அனைத்து வீடுகளும், கடலைப் பார்த்தவண்ணம் அமையுமாறு வடிவமைக்கப்பட்டன. தவிர, வீட்டுத் தொகுதியின் கூரையில் அமைவுள்ள நீச்சற்தடாகம், திறந்வெளி விருந்திடம் ஆகியவற்றோடு, இரண்டடுக்கு கார்த் தரிப்பிடத்தையும் கொண்டு அமையவுள்ளது.

அறிமுகம் செய்யும் நிகழ்வில் உரையாற்றிய இந்நிறுவனத்தின் தலைவர் டொக்டர் எஸ். பிரபாகரன், புதிய வீட்டுத் தொகுதி பற்றிய அறிமுகத்தை வழங்கிவைத்ததோடு, நிர்மாணத் தொழிற்றுறைக்கு கோறல் நிறுவனம் வழங்கிய தரமிக்க பங்களிப்பைப் பாராட்டுமுகமாக, உலக தர அர்ப்பணிப்பு விருதை, பரிஸில் அண்மையில் வென்றிருந்தமையைச் சுட்டிக்காட்டியிருந்தார்.

இங்கு உரையாற்றிய நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, 'கோறல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு முயற்சியும் - கொழும்பு 04இல் நிர்மாணிக்கப்படவுள்ள அதிசொகுசு கூட்டுரிமை வீட்டுத் தொகுதி உட்பட - வெற்றிபெற, எனது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். குறைந்த காலப்பகுதியில், கோறல் ஹோல்டிங்ஸ் நிறுவனம், மிக நீண்ட பயணத்தை மேற்கொண்டுள்ளது. அவர்கள் மேற்கொள்ளும் 11ஆவது செயற்றிட்டம் இதுவென நான் அறிந்தேன். இது பூரணப்படுத்தப்பட்டதும், அற்புதமான செயற்றிட்டமாக இது அமையும்' எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .