2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வாய வைச்சிக்கிட்டு சும்மா இருந்திருக்கலாம்...

Princiya Dixci   / 2016 ஜூன் 18 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாம் என்னதான் திறமைச்சாலியாக இருந்தாலும் சவால் விடும்போது, முன்னம் பின்னம் கொஞ்சம் யோசித்துவிட்டு சவால் விடுக்கனும். இல்லையென்றால் சகலர் முன்னிலையிலும் மூக்குடைக்கப்பட்டு, ஏற்கெனவே நமக்கிருந்த நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிடும்.

மூக்குடைபடுவதற்கு, வாய் மிகவும் முக்கியமானதாகிவிடுகின்றது. அதனை கொஞ்சம் நிதானமாக பயன்படுத்தினால், எந்தவொரு பிரச்சினையும் ஏற்படாது. களங்கமும் ஏற்படாது.

அவ்வாறான சம்பவமொன்றுதான், இந்தியா- ஹரியானாவில் இடம்பெற்றுள்ளளது. அந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் கலக்கிக்கொண்டிருக்கின்றது.

ஹரியானாவில் ஒரு குத்துச்சட்டைப் போட்டி நடைபெற்றது. அதில், பங்கேற்ற வீரர், போட்டியின் நிறைவில், மைக்கைப் பிடிங்கி... 'தன்னை வீழ்த்த யாராவது உள்ளீர்களா?' என்று சவால் விட்டார்.

பார்வையாளர் மத்தியிலிருந்த, சல்வார் அணிந்து வந்த பெண்ணொருவர் அவரை, விழுத்தி கடுமையாகத் தாக்கினார். பிடிக்க சென்றவர்களையும் உதரித்தள்ளிவிட்டு, சவால் விட்டவரை புரட்டி, புரட்டி எடுத்துவிட்டார்.

அந்த சல்வார் அணிந்திருந்த பெண், முன்னாள் பொலிஸ் அதிகாரியும் பளு தூக்கும் வீராங்கனையான கவிதா என அறியப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .