2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மனிதாபிபமே, மானுட நாகரிகம்...

Princiya Dixci   / 2016 ஜூன் 24 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலைநகரொன்றில், அது மிகப் பெரிய ஜவுளிக்கடை. காலை 9 மணிக்கு முன்னர் ஊழியர் கடைக்கு வந்தால், இரவு ஏழு மணிவரை வியாபாரம் களைகட்டும். ஊழியர்களின் உணவு நேரம் தவிர ஓயாத வேலைதான்.

அன்று மாலை 6 மணிக்குள் மக்கள் கூட்டம் குறைந்து முற்றாகவே கடையில் அமைதி சூழ்ந்து விட்டது. கடைச் சிப்பந்திகள் தங்களை ஆசுவாவசப் படுத்தி ஓய்வு எடுக்கவும், உடன் அங்கே வந்த ஊழியர்களின் மேலாளர், 'என்ன சும்மா இருக்கிறீர்கள், அந்தப் புடவைகளைக் கீழே இறக்குங்கள், ஒழுங்காக மடித்து வையுங்கள்' என, ஏதேதோ கட்டளைகளைப் பிறப்பித்தவண்ணமிருந்தார்.

அவர், கடை முதலாளிக்கு விசுவாசமாக இருக்க, இப்படியாக இரக்கமின்றிச் சிப்பந்திகளைப் பிழிந்தெடுப்பது வழமைதான்.

தங்கள் நலனுக்காகப் பிறரை வறுத்தெடுப்பது, கடவுளை வெறுப்பேற்றும் செயல். மனிதாபமுடன் நடப்பதே, மானுட நாகரிகம்.

வாழ்வியல் தரிசனம் 24/06/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .