2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பாடசாலை அனுமதி தொடர்பில் புதிய தேசிய கொள்கை

Princiya Dixci   / 2016 ஜூன் 24 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிள்ளைகளுக்கான பாடசாலை அனுமதி தொடர்பில் பெற்றோர் அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் பின்னால் செல்வதைத் தவிர்க்கும் வகையில் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுமதிப்பது தொடர்பில் ஒரு புதிய தேசிய கொள்கையை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பு ரோயல் கல்லூரியில் நேற்று வியாழக்கிழமை (23) பிற்பகல் இடம்பெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுமதிப்பது தொடர்பில் இதுவரையில் எல்லா அரசாங்கங்களும் எடுத்த தீர்மானங்கள் வெற்றியளிக்கவில்லை எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இது தொடர்பில் எல்லா அரசாங்கங்களும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியமையையும் நினைவுகூர்ந்தார்.

பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுமதிப்பது தொடர்பில் பெற்றோர் போராட வேண்டியிருப்பின் அது எல்லா அதிகாரிகளினதும் கவனத்தைப்பெறவேண்டிய ஒரு விடயமாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பிரபல பாடசாலைகளில் கிடைக்கக்கூடிய எல்லாவற்றையும் ஏனைய எல்லா பாடசாலைகளிலும் கிடைக்கச் செய்வதற்கு ஒரு அரசாங்கம் என்றவகையில் தற்போதைய அரசாங்கம் எல்லா அர்ப்பணிப்புகளையும் செய்யும் என்றும் குறிப்பிட்டார்.

பிரபல பாடசாலைகளில் உள்ள சிறப்புகளை போட்டித்தன்மையற்ற பாடசாலைகளிலும் ஏற்படுத்துவதற்குத் தேவையான வழிகாட்டலையும் பங்களிப்பையும் பெற்றுக்கொடுக்குமாறு இதன்போது ஜனாதிபதி பாடசாலை அதிபர்களைக் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .