2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்

Niroshini   / 2016 ஜூன் 25 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை, கந்தளாய் தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரொருவரின் கைத்துப்பாக்கி வெடித்து, அதே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக  குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதவான் தம்மிக, நேற்று உத்தரவிட்டார்.

வெளிக் கடமைக்கு செல்வதற்காக பொலிஸார் இருவரும் பதிவேட்டில் கையெழுத்து இட்டுக் கொண்டிருந்த போது, பொலிஸ் உத்தியோகத்தரின் இடுப்பிலிருந்த கைத்துப்பாக்கி வெடித்ததில், அருகிலிருந்த கான்ஸ்டபிளின் இடுப்பில் தோட்டா பாய்ந்துள்ளது.

இதில் படுகாயமடைந்த அவர், கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் வியாழக்கிழமை பகல் 1.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .