2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஹிலாரிக்கு வாக்களிப்பேன் என்கிறார் சான்டர்ஸ்

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 24 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், ஜனநாயகக் கட்சியில் தனது போட்டியாளரான ஹிலாரி கிளின்டனுக்கு வாக்களிக்க போவதாக ஐக்கிய அமெரிக்காவின் செனட்டரான பேர்ணி சான்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகக் கட்சியில் ஜனாதிபதி வேட்பாளராவதற்கு, ஹிலாரியும் சாண்டர்ஸும் போட்டியிட்டிருந்த நிலையில், ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்கச் செயலரான ஹிலாரி,  இம்மாத ஆரம்பத்தில் வென்றிருந்தார்.

இந்நிலையிலேயே, குடியரசுக் கட்சியின் வேட்பாளராக வருவார் என எதிர்பார்க்கப்படும் டொனால்ட் ட்ரம்பை தோற்கடிப்பதுக்கு, தன்னுடைய சக்தியில் அனைத்தையும் பயன்படுத்த போவதா, தன்னை சோஷலிசவாதி என வர்ணிக்கும் சான்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், தனது பிரசாரத்தை நிறுத்தப் போவதாக எவ்விடத்திலும் சான்டர்ஸ் தெரிவிக்கவில்லை. மாறாக,  ஜனநாயகக் கட்சியின் ஜூலை மாத மாநாட்டின் போது, உயர்வான குறைந்தபட்ச ஊதியம் உள்ளடங்கலாக, உறுதியான அடித்தளத்துக்கு போராடுவதே தனது தற்போதைய பணியென்று சான்டர்ஸ் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .