2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இறுதியில் மேற்கிந்தியத் தீவுகள்

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 25 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்க அணிகள் மேற்கிந்தியத் தீவுகளில் விளையாடிய முக்கோணச் சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலியா ஏற்கனவே தகுதி பெற்றுள்ள நிலையில், தற்போது மேற்கிந்தியத் தீவுகளும் தகுதி பெற்றுள்ளது. தென்னாபிரிக்க அணியை வென்றதன் மூலமே இறுதிப் போட்டிக்கு மேற்கிந்தியத் தீவுகள் தகுதி பெற்றுள்ளது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணியின் தலைவர் ஏ.பி.டிவில்லியர்ஸ், மேற்கிந்தியத் தீவுகள் அணியினை முதலில் துடுப்பெடுத்தாட பணித்திருந்த நிலையில், ஆரம்பத்தில் 21 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோதும், டரன் பிராவோ, கீரன் பொலார்ட் ஆகியோரின் இணைப்பாட்டம் காரணமாக, 49.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 285 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. டரன் பிராவோ102, கீரன் பொலார்ட் 62, ஜேஸன் ஹோல்டர் 40, கார்லோஸ் பிராத்வெயிட் ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில், தென்னாபிரிக்க அணி சார்பாக, கஜிஸ்கோ றபடா, கிறிஸ் மொரிஸ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பதிலுக்கு 286 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, 46 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 185 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 100 ஓட்டங்களால் தோல்வியடைந்து, தொடரிலிருந்து வெளியேறியது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, பர்ஹான் பெஹாத்திரின் 35, மோர்னே மோர்க்கல் ஆட்டமிழக்காமல் 32, இம்ரான் தாஹீர் 29, வெய்ன் பார்னல் 28 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில், மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக, ஷனோன் கப்ரியல், சுனில் நரைன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும் கார்லோஸ் பிராத்வெயிட் இரண்டு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக டரன் பிராவோ தெரிவானார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .