2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

படையினரின் பாவனை தவிர்ந்த ஏனைய நிலங்கள் கையளிக்கப்படும்

Gavitha   / 2016 ஜூன் 26 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

'வடக்கு- கிழக்கில் பாதுகாப்புக்காக உள்ள படையினரின் பாவனை தவிர்ந்த ஏனைய நிலங்களை மக்களிடம் மீள வழங்குவோம். படையினருக்கு தேவையான நிலங்களுக்காக நட்டஈடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

யாழ். வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட காங்கேசன்துறையில், 201.3 ஏக்கர் நிலம் மீள்குடியேற்றத்துக்காக அனுமதிக்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடரந்து தெரிவிக்கையில்,

'ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர்,  நலன்புரி நிலையங்களிலும் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை அவர்களுடைய சொந்த நிலங்களில் மீள் குடியேற்ற முயற்சிக்கின்றார்கள். அவர்களுடைய பணிப்பின் பெயரிலேயே நாம் இங்கு வந்திருக்கின்றோம். அந்த வகையில் வடகிழக்கு மாகாணங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த படையினர் தங்கியிருப்பதற்கு தேவையான நிலங்கள் தவிர மக்களுடைய மற்றய நிலங்களை மக்களிடமே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது' என்று அவர் குறிப்பிட்டார்.

'இந்தச் செயற்பாடுகளுக்காக, முப்படையினரும் அர்ப்பணிப்புடன் செயலாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். தற்போது படையினருக்கு தேவையான நிலங்கள் எவ்வளவு என்பதை நாம் அடையாளப்படுத்தவில்லை. அதற்காக விஞ்ஞானரீதியான ஆய்வுகள் நடக்கின்றன. எனினும் படையினருக்கு தேவையான காணிகளுக்காக அந்த காணிகளுக்கு சொந்தமான மக்களுக்கு நட்டஈடு வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும், 'மீதமான நிலங்களை மீள்குடியேற்றத்துக்காக விடுவிக்கும் நடவடிக்கை உடனடியாக செய்ய கூடிய ஒன்றல்ல.

எனவே அது படிப்படியாக மேற்கொள்ளப்படும். இதேபோல் முகாம்களில் உள்ள காணி இல்லாத மக்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்குவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனை யாழ்.மாவட்டச் செயலகம் மேற்கொள்ளும்' எனத் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .