2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வடமராட்சி கடல்பகுதி மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு

Gavitha   / 2016 ஜூன் 26 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

வெளி மாவட்டத்தில் இருந்து அத்துமீறி வடமராட்சி கடற்பரப்பில் கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வந்த மீனவர்களால், வடமராட்சி கடல்பகுதி மீனவர்கள் பாதிக்கப்படுகின்றமை தொடர்பாக யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் தலைமையில் மருதங்கேணி பிரதேச செயலகத்தில் சனிக்கிழமை (25) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

வெளி மாவட்டத்தில் இருந்து அத்துமீறி வடமராட்சி கடற்பரப்பில் கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வந்த மீனவர்களால், வடமராட்சி கடல்பகுதியில் கரைவலை மற்றும் ஏனைய வலைகள் மூலம் தொழிலில் ஈடுபட்டுவந்த தொழிலாளர்களின் வலைகள் மற்றும் கடல் தொழில் உபகரணங்கள் சேதமாக்கப்பட்டு வந்தன.

மிக நீண்ட காலங்களாக நிலவி வந்த இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக வடமராட்சி மீனவர் சங்க சமாசம் மற்றும் சம்மேளன பிரதிநிதிகளையும் வெளி மாவட்ட மீனவப்பிரதிநிதிகளையும் இணைத்து இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

மேற்படி கலந்துரையாடலில் யாழ். மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகள் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை தெளிவாக எடுத்து விளக்கினர். இந்தப் பாதிப்புக்களை வெளி மாவட்ட மீனவர்களும் ஏற்றுக்கொண்டனர்.

இதன்போது வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தந்து கடலட்டை தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்கள் மீன்பிடி அமைச்சினால் வழங்கப்பட்டவாறு ஐந்து கடல் மயில் தொலைவுக்கு அப்பாலும் அதே வேளை இரவு வேளைகளில் இந்த தொழிலினை மேற்கொள்ள முடியாது என்ற இணக்கப்பாட்டுடன் இப்பிரச்சினைக்கு வடமராட்சி மீனவர்களின் பிரச்சினைக்கு பாதிப்பு இல்லாத வகையில் சுமூகமான ஒரு  தீர்வு எட்டப்பட்டது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், எம்.ஏ.சுமந்திரன், வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X