2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தான் பிரஜையை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

George   / 2016 ஜூன் 26 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் நாட்டின் ராவல்பின்டி நகரத்திலிருந்து ஆபரணங்களை கொண்டு வருவதாகக்கூறி ஹெரோய்ன் போதைபொருளை மறைத்து எடுத்து வந்த சந்தேகநபரை ஒருவாரம் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நீர்கொழும்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.

சுமார் 5 கிலோகிராம் ஹெரோய்ன் போதைபொருளுடன் குறித்த பாகிஸ்தான் பிரஜை, சனிக்கிழமை காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்தேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.

கட்டாரிலிருந்து அனுப்பப்பட்ட இவரது பயணப்பொதியில் இரண்டு பொதிகளில் அடைக்கப்பட்டு இந்த போதைபொருள் கடத்தப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர் பாகிஸ்தான், கட்டார் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் போதைபொருட்களை பகிர்ந்தளிப்பவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் மாலைதீவுகள் பிரஜையிடம் 1கிலோ 500 கிராம் போதைபொருளை கொடுத்தனுப்பியவர் இவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .