2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வெள்ளத்தினையடுத்து மேற்கு வேர்ஜினியாவில் அனர்த்தம் பிரகடனம்

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 26 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் மேற்கு வேர்ஜினியா மாநிலத்தில், கடந்த நூற்றாண்டுகளில் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டிருந்த நிலையில், மேற்கு வேர்ஜினியாவில் பாரிய அனர்த்தத்தை ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதி பராக் ஒபாமா பிரகடனப்படுத்தியுள்ளார்.

ஆளுநர் ஏர்ள் றே டொம்ப்லின்னினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்து. மோசமாக பாதிக்கப்பட்ட மூன்று கவுண்டிகளுக்கு மத்தியிலிருந்து உதவி வழங்குமாறு ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

தற்காலிக வசிப்பிடங்களுக்காகவும் திருத்தங்களை மேற்கொள்வதற்காகவும் பாதிக்கப்பட்ட இடங்களில் வசிப்பவர்கள், தற்போது மானியத்தை பெறுகின்ற நிலையில், 30,000க்கு அதிகமான வீடுகளுக்கும் வர்த்தக நிலையங்களும் மின்சாரம் இல்லாமல் இருக்கின்றன.

கடந்த வியாழக்கிழமை (23) பெய்த கடுமையான மழையினால், ஆறுகளும் நதியோடைகளும் வேகமாக வழிந்தோடியதில் சில நகரங்களுக்கிடையிலான தொடர்புகள் துண்டிக்கப்பட்டதுடன் சில பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கானோர் மீட்கப்பட்டிருந்தனர்.

தனது வருடாந்த மழை வீழ்ச்சியின் நான்கிலொரு பங்கை, ஒருநாளிலேயே மேற்கு வேர்ஜினியா பெற்றதாக ஐக்கிய அமெரிக்காவின் தேசிய வானிலை சேவை தெரிவித்துள்ளது.

மேற்கு வேர்ஜினியாவின் 55 கவுண்டிகளில் 44இல் அவசரகால நிலைமை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 500 படைவீரர்களுக்கு மீட்புப் பணியில் உதவுவதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .