2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கோப்பா அமெரிக்கா: கொலம்பியாவுக்கு மூன்றாமிடம்

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 26 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோப்பா அமெரிக்கா தொடரின் 100ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு ஐக்கிய அமெரிக்காவில் இடம்பெறுகின்ற சிறப்புத் தொடரில், மூன்றாமிடத்தை பெற்று கொலம்பியா ஆறுதல் பட்டுக் கொண்டது.

போட்டியை நடாத்தும் நாடான ஐக்கிய அமெரிக்காவை 1-0 என்ற கோல்கணக்கில் தோற்கடித்தே, கொலம்பியா மூன்றாமிடத்தைப் பெற்றிருந்தது. இப்போட்டியில் பெறப்பட்ட கோலை, போட்டியின் 31ஆவது நிமிடத்தில், கொலம்பிய அணித்தலைவரான ஜேம்ஸ் றொட்ரிகாசிடமிருந்து அருமையான பந்தொன்றைப் பெற்ற கார்லூஸ் பக்கா பெற்றிருந்தார்.

ஆரம்பத்தில் மத்திய களத்தை கட்டுப்படுத்திய அமெரிக்காவுக்கு, பொப்பி வூட்டுக்கு கோல் பெறுவதற்கான நெருங்கிய வாய்பொன்று கிடைத்திருந்ததுடன், கிளைன்ட் டெம்ப்ஸேயின் உதையொன்றினை, கொலம்பிய அணியின் கோல்காப்பாளரான டேவிட் ஒஸ்பினா அருமையாக தடுத்திருந்தார்.

எவ்வாறெனியும் அமெரிக்காவை விட அதிகமான தாக்குதல் ஆட்டத்தினை வெளிப்படுத்திய கொலம்பியாவுக்கு, ஜுவான் குவாடர்டோ உதைத்த பந்து, கோல்கம்பத்தில் பட்டு திரும்பியிருக்காவிட்டால், 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றியைப் பெறக் கூடியதாகவிருந்திருக்கும்.

தென்னமாரிக்காவின் பிரதான கால்பந்தாட்டத் தொடரான கோப்பா அமெரிக்காவை 2001ஆம் ஆண்டு கொலம்பியா வென்றதன் பின்னர், இவ்வருடம் மூன்றாமிடத்தை பெறுவதே, கோப்பா அமெரிக்காவில் கொலம்பியாவின் சிறந்த பெறுபேறாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .