2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

முல்லைத்தீவு நகருக்குள் சகல பஸ்களும் வருவதில்லையென குற்றச்சாட்டு

Menaka Mookandi   / 2016 ஜூன் 26 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு நகருக்குள் சகல பஸ்களும் வருகை தருவதில்லையென முல்லைத்தீவு நகர மக்கள், குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளனர். கடந்த ஒருவருடத்துக்கு முன்னர், முல்லைத்தீவு நகர அபிவிருத்திக் குழு முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரைச் சந்தித்து, முல்லைத்தீவு நகரின் பல்வேறு தேவைகள் தொடர்பாக கலந்துரையாடியது.

அக்கலந்துரையாடலில், மாவட்டச் செயலகத்துக்கு அருகில் தற்போது புதிய பஸ் நிலையம் அமையவுள்ள நிலையில், இந்த பஸ் நிலையத்தில் தரித்து நிற்கும் சகல பஸ்களும், முல்லைத்தீவு நகருக்குள் பயணித்து மக்களை ஏற்றி மாவட்டத்துக்குள்ளும்  பிறவிடங்களுக்கும் பயணிப்பதற்கேற்ற ஒழுங்கினை மேற்கொள்ளுமாறு வேண்டியிருந்தது.

மாவட்டச் செயலாளர் எடுத்த நடவடிக்கை காரணமாக, ஆரம்பக் காலத்தில், சகல பஸ்களும் முல்லைத்தீவு நகருக்குள் பயணித்து பயணிகளை ஏற்றிச்சென்றன. தற்போது ஓரிரு உள்ளூர் பணியிலீடுபடும் பஸ்களைத் தவிர, கூடுதலான பஸ்கள் நகருக்குள் பயணிப்பதில்லையென மக்களால் தெரிவிக்கப்படுகின்றது.

பஸ் நிலையத்துக்கும் முல்லைத்தீவு நகரமத்திக்கும் இடையில், 300 மீற்றர் வரையான தூரமே உள்ள நிலையில், மக்கள் நடந்து சென்றே பஸ்களில் பயணிக்கவேண்டிய நிலைமை காணப்படுகின்றது. இந்நிலையில், சகல பஸ்களும் நகர மத்திக்குள் வந்துசெல்லக் கூடியவகையில், மாவட்டச் செயலாளர் நடவடிக்கையெடுக்க வேண்டுமெனவும் மக்களினால் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .