2024 மார்ச் 28, வியாழக்கிழமை

'வற்' வரிக்கு எதிராக இன்று கறுப்புக் கொடி

Sudharshini   / 2016 ஜூன் 27 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹெமட் ஆஸிக்

கண்டியிலுள்ள வர்த்தக சங்கங்களின் ஒன்றிணைந்த கூட்டமைப்பு, 'வற்'  (பெறுமதி சேர்க்கப்பட்ட வரி) அதிகரிப்புக்கு எதிராக, 29ஆம் திகதியன்று கண்டியில் ஹர்த்தாலை அனுஷ்டிக்கவுள்ளது.

கண்டி தமிழ் வர்த்தகர் சங்கம், கண்டி முஸ்லிம் வர்த்தகர் சங்கம், பௌத்த வர்த்தக சங்க உறுப்பினர்கள் இணைந்தே இத்தீர்மானத்தைத் எடுத்துள்ளனர்.

இன்று 27ஆம் திகதி சகல வர்த்தக நிலையங்களின் முன்பாகவும் 'வற்'க்கு எதிர்ப்பைத் தெரிவித்து கறுப்புக் கொடியைப் பறக்க விட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 29ஆம் திகதி காலை 10 மணியளவில் அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடிவிட்டு, கண்டி ஜோர்ஜ் சில்வர் பூங்காவில் நடைபெறும் கூட்டம் மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் என்பவற்றில் வர்த்தகர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X