2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஏற்றுமதி சேவைகளை அதிகரிப்பதற்கான செயலமர்வு

Princiya Dixci   / 2016 ஜூன் 27 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழ் 'இலங்கைக்கான ஏற்றுமதி சேவைகளை எவ்வாறு அதிகரிப்பது?' என்ற கருப்பொருளிலான செயலமர்வு, வணிகத் திணைக்களத்தினால் பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (27) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு செயலமர்வை ஆரம்பித்து வைத்ததுடன், அங்குரார்ப்பண உரையையும் நிகழ்த்தினார்.

இந்த செயலமர்வுக்கான ஒத்துழைப்பை பண்டாரநாயக்கா சர்வதேச கற்கைகள் மையம் வழங்கியுள்ளது.
இந்த நிகழ்வில் ஜெனீவாவில் இயங்கும் உலக வணிக அமைப்பின் வர்த்தக சேவைகள் பணிப்பாளர் ஹமித் மம்தொஹ் மற்றும் வைத்தியர்கள், விரிவுரையாளர்கள், பொறியியலாளர்கள், உட்பட பல உயர் துறைகளைச் சார்ந்த நிபுணர்கள் பங்கேற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .