2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சிறிமாவோ மாணவியர் ஜனாதிபதியிடம் நினைவுக் குறிப்பு கையளிப்பு

Niroshini   / 2016 ஜூன் 27 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய போதைப்பொருள் தடுப்பு நிகழ்ச்சித்திட்டத்தோடு இணைந்ததாக சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலய மாணவியரால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நினைவுக் குறிப்பு கையளிக்கும் நிகழ்வு இன்று (27) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.

கல்லூரியின் மதுவிலக்கு சங்கத்தின் தலைவி டானியா காவிந்தி என்ற மாணவி ஜனாதிபதியிடம் இந்த நினைவுக் குறிப்பை கையளித்தார்.

ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் 'போதையிலிருந்து விடுபட்ட நாடு' எனும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் பாத யாத்திரை ஒன்றை ஏற்பாடு செய்த சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி மாணவிகள், கொழும்பில் அமைந்துள்ள ஏனைய பாடசாலை மாணவர்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில், தேசிய போதைப்பொருள் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் வைத்தியர் சமந்த கித்தலவஆராச்சி, சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியின் அதிபர் திருமதி மானெல் ஹேரத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .